தமிழ் சினிமாவிற்கு பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் கனிகா.
அதனை தொடர்ந்து இவர் தல அஜித்துடன் வரலாறு படத்தில் பெரியளவில் பிரபலமானார். மேலும் தமிழை விட இவர் அதிகமாக மலையாள படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருந்தார்.
அதுமட்டுமின்றி தற்போது இவர் நடிப்பில் கோப்ரா, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட முக்கிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் நடிகை கனிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு மதுரை பொண்ணு என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram