இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் கடுமையான தாக்குதல் நடத்தியதாக உள்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என இந்தியா தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையினர் ஒழுக்கமானவர்கள் எனவும் தமது பணிகளை சீரிய ஒழுக்கத்துடன் மேற்கொள்பவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்குதலுக்கு இலக்கானதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளது.
இலங்கை இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை இந்தியா மனிதாபிமான அடிப்படையில் நோக்குவதாகவும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது.