மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருப்பதனால் அரசாங்கத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் அரசாங்கம் நாடு முழுவதிலும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருப்பதனால் நாள் ஒன்றுக்கு 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த பயணத்தடை காலத்தில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள மொத்த வருமான இழப்புத் தொகை ஆயிரத்து ஐநூறு கோடி ரூபா என மதுவரித் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைய வழியாக மதுபானங்களை விற்பனை செய்வதற்கு நிதி அமைச்சு அனுமதி வழங்கிய போதிலும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இணைய வழியாக மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.