உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மூன்று வேகப்பந்து, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நாளை தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றிரவு ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடும் லெவன் அணியில் முகமது சிராஜிக்கு இடமில்லை. அனுபவம் என்ற வகையில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா இடம் பிடித்துள்ளனர்.
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 11 வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா, 3. ஷுப்மான் கில், 4. புஜாரா, 5. ரகானே, 6. ரிஷப் பண்ட், 7. ஜடேஜா, 8. அஷ்வின், 9. பும்ரா, 10. இஷாந் சர்மா, 11. முகமது ஷமி.