கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜோடி நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பது தெரிந்ததே.
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இருவரும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும் கோவா, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட உள்நாட்டிலும் சுற்றுப்பயணம் செய்வார்கள் என்பதும், நயன்தாரா, விக்னேஷ் சிவன் சுற்றுப்பயணங்களின் புகைப்படங்களும் அவ்வப்போது வைரல் ஆகி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தனி விமானத்தில் கொச்சின் சென்றுள்ளனர்.
கொச்சின் விமான நிலையத்தில் இருந்து விக்னேஷ் சிவன் முதலில் இறங்கி, நயன்தாராவை கைப்பிடித்து இறக்கி விடுவது போன்ற புகைப்படமும், இருவரும் விமான நிலையத்திலிருந்து காரை நோக்கி நடந்து செல்லும் புகைப்படமும் வைரல் ஆகி வருகின்றன.
நயன்தாரா தனது காதலருடன் கொச்சினில் சில நாட்கள் ஓய்வு எடுப்பார் என்றும் அதன் பின்னர் அவர் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் நயன்தாரா நடித்து முடித்துள்ள ’நெற்றிக்கண்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த புகைப்படத்தில் நயன்தாராவை குழந்தை போன்று விக்னேஷ் பார்த்துக்கொள்வது கொள்ளை அழகுடன் இருப்பது மட்டுமின்றி, ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.