பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு நிவாரண முறையில் டெப் கணனிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சின் ஈ தக்ஷலாவ வேலைத்திட்டத்துடன் இணைந்து, இந்த டெப் கணனிகளை மாணவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இலவச இணைய இணைப்பு வசதிகளை வழங்கி, கல்வி நடவடிக்கைகளை மிகவும் இலகுவாக முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிராம புறங்களில் உள்ள வறிய மாணவர்களுக்கு இந்த டெப் கணனிகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த டெப் கணனிகள் இலங்கை பொருத்தப்பட்டு தயாரிக்கப்படுவதால், இலங்கையை சேர்ந்த சிலருக்கு தொழில் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்ததை ஒன்றின் போதே அமை்சசர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.