நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னணி வகித்த பிக்குமார்கள் தற்போது இந்த அரசாங்கத்தோடு முறுகல்களை ஏற்படுத்திக்கொண்டு இருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
தொடர்ச்சியாக இந்த பிக்குமார் அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுவருவதைக் கடந்த சில மாதங்களாகவே காணக்கூடியதாகவுள்ளது.
குறிப்பாக முரடத்தாடுவ ஆனந்ததேரர் இந்த அரசாங்கம் அரசியல் ரீதியாக வெற்றி பெறுவதற்கு பாரிய உதவிகளைப் புரிந்திருந்தார்.
அவர் கூட தற்போது இந்த அரசாங்கத்துக்குத் தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்.