விவசாயிகளுக்கான பசளை விநியோகத்தை உடனடியாக நிறுத்தாமல் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாதிக்கப்பட்ட கிண்ணியா பீங்கான் உடைந்தாறு விவசாயிகள் கவனயீர்ப்பு செய்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பின் போது விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,
இரசாயன பசளை பயன்பாட்டுக்குப் பழக்கப்பட்ட விவசாயிகள் உடனடியாக சேதனப்பசளை பாவனைக்கு நிர்ப்பந்திக்கப்படுவது ஆரோக்கியமான விடயமல்ல.
விவசாயத்தை தமது ஜீவனோபாய தொழிலாகச் செய்து வருவதோடு இரசாயனப் பசளைகளைப் பயன்படுத்தி வந்த விவசாயிகள் தற்போது தங்களுக்கான பசளைகளைப் பெற முடியாது விவசாய நடவடிக்கைகளைக் கைவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை அடைந்துள்ளனர்.
சேதனப் பசளை பயன்படுத்தும் முறைகளை படிப்படியாக விவசாயிகளுக்குப் பலக்கத்தை ஏற்படுத்தி விட்டு இறக்குமதியைக் குறைக்க முடியும்.
அத்தோடு எரிபொருள் விலை ஏற்றமும் விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளில் பாரிய தாக்கத்தை செலுத்துகிறது.
அதிலும் ஒரு நிதானமான போக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் இதன்போது கருத்து தெரிவித்துள்ளனர்.