பிரபல பின்னணி பாடகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசாவில் பிரபல பின்னணி பாடகியாக இருந்தவர் தபு மிஷ்ரா.
இவர், இந்தி, வங்காள மற்றும் பிற மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மேலும், அண்மையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதனிடையே, அவரது ஆக்சிஜன் அளவு 45-க்கும் கீழ் குறைந்தது. இதனால் வீட்டு தனிமையில் இருந்த அவரை தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.
100% வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு ரத்த கொதிப்பு அல்லது வேறு வகையான இணை நோய்கள் எதுவும் இல்லை. அவர் குணமடைந்து விடுவார் என நம்பிக்கை உள்ளது.
ஆனால் கடந்த 2 நாட்களாக அவருக்கு அளிக்கும் சிகிச்சையை அவர் ஏற்கவில்லை. தீவிர நிலையில் உள்ளார் என அவரது சகோதரி துருதி தீபா மிஸ்ரா நேற்று கூறினார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளார். தபு மிஷ்ராவின் தந்தை கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், 9 நாட்கள் கழித்து அவர் உயிரிழந்துள்ளார்.



















