கூகுள் ப்ளே ஸ்டேரில் உள்ள 8 ஆப்ஸ்கள் ஜோக்கர் மால்வேர் தாக்கியுள்ளதால், அந்த 8 ஆப்ஸ்களையும் போனில் இருந்தால் உடனடியாக நீக்கவும் என கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கூகுள் ப்ளேஸ்டேரில் உள்ள 8 செயலிகளை ஜோக்கர் மால்வேர் என்ற மென்பொருள் தாக்கியுள்ளதாக Quick Heal Security Labs நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆப்ஸ்களான, Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages, Travel Wallpapers and Super SMS ஆகிய இந்த 8 செயலிகளும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் உடனடியாக அதனை நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஜோக்கர் மால்வேரானது, சிறுது காலமாக கூகுளுக்கே ஆட்டம் காட்டியுள்ளது.
கூகுள் நிறுவனம் இதுபோன்ற பாதிக்கப்பட்ட செயலிகளை நீக்கி வரும்போதும், இந்த மால்வேர் மீண்டும் சில மாதங்களில் ஊடுருவி விடுகிறது. இந்த மால்வேர் எவ்வளவு ஆபத்தானது என்றால், இது ஆண்ட்ராய்டு போன் செயல்பாட்டையே முடக்கும் அளவுக்கு தீவிரமாக செயல்படுகிறது.
மேலும், இது ஆண்ட்ராய்டு பயனர்களின் தகவல்களை எளிதாக திருடுகிறது. அதேபோல், ஆண்ட்ராய்டு போனில் உள்ள தகவல்கள், எஸ்எம்எஸ் மற்றும் போனுக்கு வரும் ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களையும் திருடுவதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.




















