மகளின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதற்காக போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
மகளின் திருமணத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் பிரமாண்டமாக நடத்துவதற்கான பணத்தை திரட்டுவதற்காகவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அவர் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் சீருடையில் சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான 52 கிலோ ஹெரோயின் கடத்திய களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாணையின் போது இந்த தகவலை வெளியிட்டார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னரும் கொழும்பிற்கு 75 கிலோ ஹெரோயின் கடத்தியுள்ளார். அதற்காக 20 இலட்சம் ரூபா பெற்றுள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹெரோயின் கடத்திய உப பொலிஸ் அதிகாரி மட்டுமல்ல கடத்தப்பட்ட ஹெரோயினை பெறுவதற்காக காத்திருந்த இருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்
. இரண்டு வாகனங்களில் போதைப்பொருள் கடத்திய வேளையில் பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று கைது செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து பொலிஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.