நடிகர் விஜய் 90களில் இருந்து தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு இல்லை.
ஆனால் இவரது படம் எப்போது வரும் என ரசிகர்களை தாண்டி விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவரது படம் என்றாலே திரையரங்கில் கூட்டம் கூடும், விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் வரும். இன்று இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக 65வது படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியானது.
Beast என்ற பட பெயரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சரி இப்படி தமிழ் சினிமாவே கொண்டாடும் விஜய்யின் சொத்து மதிப்பு விவரம் பற்றி காண்போம்.
Beast படத்திற்கு விஜய்க்கு ரூ. 100 கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறுகின்றனர்.
நடிகர் விஜய்யிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார், ரூ. 1.30 கோடி மதிப்பிலான ஆடி A8, ரூ.75 லட்சம் மதிப்புள்ள BMW series 5, ரூ. 90 லட்சம் மதிப்புள்ள BMW X6, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட கார்கள் மற்றும் விலையுயர்ந்த சைக்கிள் மற்றும் பைக்குகளும் உள்ளன.
நடிகர் விஜய்யின் ஆண்டு வருமானம் ரூ. 100 கோடி முதல் ரூ. 120 கோடி வரை உள்ளதாக கடந்த 2019 முதல் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சாலி கிராமம், நீலாங்கரை மற்றும் பனையூர் உள்ளிட்ட இடங்களில் நடிகர் விஜய்க்கு பங்களாக்கள் உள்ளன.
விஜய்யின் மொத்த சொத்து 56 மில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 410 கோடியாம்.
இப்படி சொத்து மதிப்பை விட விஜய் மற்றவர்களுக்கு பெரிய அளவில் உதவிகள் செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்பது ரசிகர்களே அறிந்தது தான்.