தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர் நடிகர் சூர்யா, இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 திரைப்படம் உருவாகவுள்ளது, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
இந்நிலையில் இன்று நடிகர் சூர்யா மற்றும் அவரின் மனைவி ஜோதிகா இருவரும் சேர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
இதனை நடிகர் சூர்யா அவரின் ட்விட்டர் பக்கத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
#Vaccinated pic.twitter.com/3SJG9wYPFD
— Suriya Sivakumar (@Suriya_offl) June 22, 2021