ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 77 கைதிகளும் இந்த 93 பேரில் உள்ளடங்குகின்றனர்.
மேலும், 16 தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர்களும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானவர்களின் முழு விபரங்களை சிறைச்சாலை திணைக்களம் இதுவரையில் வெளியிடவில்லை எனவும் தெரியவருகிறது.