கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் சுவிஸ் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதவாது, சனிக்கிழமை முதல் 10,000 பேர் கலந்துக்கொள்ளும் வகையில் நாட்டில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் அல்லது விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள மக்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ், கொரோனாவிலிருந்து மீண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா இல்லை என்ற சோதனை முடிவை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சான்றிதழ் வழங்கும் மக்கள் எப்படி அனுமதிக்கப்படுவார்களோ, அதே போல் அவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என குறிப்பிட்டுள்ளது.
கொரோனா சான்றிதழ் தேவைப்படாத நிகழ்வுகளில் இருக்கை வசதி இருந்தால் 1000 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இருக்கை வசதி இல்லை என்றால் உட்புற நிகழ்வுகளில் 250 பேரும், வெளிப்புறம் நடக்கும் நிகழ்வுகளில் 500 பேரும் அனுமதிக்கப்படுவார்கள் என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.