கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் வைத்து அவரின் மெய்ப்பாதுகாவலர் பொது மகன் ஒருவரை சுட்டுப் படுகொலை செய்திருந்தார்.
இந்த சம்பவம் அங்கிருக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியிருந்தது. உயிரிழந்தவரின் இறுதி சடங்கு நேற்று மாலை இடம்பெற்றிருந்த நிலையில் உயிரிழந்தவருக்கு நியாயம்கோரி பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
அத்துடன் சம்பவத்தின் உண்மைத் தன்மையை அறிவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்னால் உள்ள சிசிரிவி கமரா கடந்த மூன்ற மாத காலமாக செயலிழந்து காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன? குறித்த நபர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விபரிக்கின்றார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உப தலைவர் பிரசன்னா இந்திரகுமார்.