நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் ஜுலை மாதம் 5ம் திகதி வரை அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள போதிலும், பொது போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் மாத்திரமே செயற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாண எல்லைகளை தாண்டி அத்தியாவசிய சேவைகளுக்காக சில பொது போக்குவரத்துக்களை ஈடுபடுத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் வேகமாக பரவி வரும் கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.