முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் எதேச்சாதிகாரமாக மன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகளின் மற்றுமோரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்செலட் தெரிவித்துள்ளார்.
எதேச்சாதிகாரமாக வழங்கப்படும் பொது மன்னிப்புக்கள் சட்டம் ஒழுங்கை மலினப்படுத்துவதுடன், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதலை பலவீனப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.