கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு நேற்றைய தினம் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர்களில் 25இற்கும் அதிகமானோர் திடீர் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகை தந்த குறித்த ஊழியர்கள் திடீரென உடல் நல பாதிப்பிற்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.