தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சியின் முன்னால் இருக்கும் சிறார்களுக்கு நீண்டகால உடல் மற்றும் மன ரீதியான அழுத்தங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால், தற்போது கோவிட் தொற்று காலத்தில் சிறுவர்ளுக்கு பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புக்கு தேவையான பாடங்களுக்காக மாத்திரம் தொழிநுட்பத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தை பெற்றோர் வழங்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
சிறுவர்கள் தொழிநுட்ப தொடர்பான புதிய முறைகளை கண்டறிபவர்கள் என்பதால், அவர்கள் தவறாக வழிநடத்தப்படும் ஆபத்து காணப்படுகிறது.
இது குறித்து பெற்றோர் கூடிய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் மருத்துவர் சன்ன டி சில்வா எச்சரித்துள்ளார்.