விஜய் தொலைக்காட்சியில் சில சீரியல்கள் ஹிட் லிஸ்டில் உள்ளது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் இடம்பெறும்.
இந்த இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது, இந்த வாரத்துடன் இது முடிந்துவிடும் என்றும் தெரிகிறது.
அவரவர் சீரியல் பழைய செட்டில் இருந்து பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்களும் இன்ஸ்டாவில் வெளியாகி இருக்கிறது.
இரண்டு சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடிக்கும் தனம் மற்றும் கோபி இதற்கு முன்பே ஒரு பழைய சீரியலில் ஒன்றாக நடித்துள்ளனர், அதுவும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாகியுள்ளது.
மகாராணி என்ற சீரியலில் தான் ஒன்றாக நடித்துள்ளனர், 2009ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் சில வருடங்கள் ஹிட்டாக ஓடியது.
தற்போது இந்த சீரியலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அட இவர்களா இது என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.