தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் கார்த்திக். இவர் நடிப்பில் தற்போது சர்தார் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.
விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் சர்தார்.
சில மாதங்களுக்கு இப்படத்தின் First லுக் வெளியானது. இதில் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார் நடிகர் கார்த்திக்.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை சிம்ரன் இப்படத்தில் வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிம்ரன் ஏற்கனவே சீமராஜா திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.