இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மாநிலத்திற்கு அகதியாக சென்ற தமிழ் பெண்ணொருவர் அங்கு பேருந்து சாரதியாக பணியாற்றி வருகிறார்.
யாழ்.பருத்தித்துறை பகுதியை சேர்ந்த சோதிகா ஞானேஸ்வரன் என்பவரே, பிரிஸ்பேர்னின் பொதுப்போக்குவரத்து துறையில் பேருந்து சாரதியாக பணியாற்றி வருகிறார்.
இலங்கையிலும், இந்தியாவிலும் அகதி வாழ்க்கை வாழ்ந்த நிலையில், தனது பெற்றோர்கள் காலமான நிலையில், திருமண வாழ்வும் 3 வருடத்தில் முறிந்த பின்னர் 2013ஆம் ஆண்டில் கடல்மார்க்கமாக, தனது 6 வயது மகனுடன் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 5 வருடம் தங்கியிருக்கும் விசா வழங்கப்பட்ட பின்னர், தோட்ட வேலை, சமையல் வேலை, துப்பரவு வேலை உள்ளிட்ட பல வேலைகளை செய்ததாக குறிப்பிடுகிறார்.
வாகனம் செலுத்தும் முன் அனுபவமின்றி அவுஸ்திரேலியா சென்ற அவர், அங்கு சாரதி பயிற்சி பெற்று தற்போது பொதுப்போக்குவரத்து பேருந்து சாரதியாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.