இந்திய அணியின் தூண் என்றழைக்கப்படும், சட்டீஸ்வர் புஜாரா கடந்த சில காலங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தமால் சொதப்பி வருவதால், அவரை அணியில் இருந்து தூக்க, இந்திய தேர்வு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாஈகியுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணிக்கான டெஸ்ட் அணியில் அறிமுகமான சட்டீஸ்வர் புஜாரா, பல டெஸ்ட் போட்டிகளில் இந்திய் அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார்.
இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகாளாக, புஜாராவின் ஆட்டம் அந்தளவிற்கு சொல்லிக் கொள்ளும் படி இல்லை. 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சேர்த்து இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவரின் சராசரி வெறும் 25 ஆக மட்டுமே இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரிலும் புஜாரா சொதப்பிவிட்டார்.
இதனால், அவர் இந்திய அணிக்கு ஆடியது போதும், என்ற பேச்சு எழ ஆரம்பித்தது. இந்நிலையில், அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரவிருப்பதால், இந்திய அணியில் மிகப் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் படி, புஜாராவை நீக்கி, அவருடைய இடத்தில் களமிறங்க இந்திய அணியின் மற்ற இரு பேட்ஸ்மேன்களான மயாங்க் அகர்வாலும், கே எல் ராகுலும் ஆகியோரை களமிறக்க முடிவு செய்துள்ளதாம்.
இதில் கே எல் ராகுல் ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் எந்த இடத்தில் களமிறக்கிவிட்டாலும் அணிக்கு தேவையான பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
மயாங்க் அகர்வால் ஒரு மிகச் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் ஏற்கனவே இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடியுள்ளதால், அவரும் புஜாராவின் இடத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என்று கூறப்படுகிறது.