தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஏறாவூரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்து ஒன்று பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மிரிஸ்வத்தை சந்தியில் வைத்து இந்த பேருந்து பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பேருந்தில் பயணித்த சாரதி உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை கண்டி – கொழும்பு வீதியில் வைத்து இந்த பேருந்து சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே கைது செய்யப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையில் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பயணிப்பது சட்டவிரோத செயலாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.