தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டு உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். பிகில், மாஸ்டர் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து தற்போது இயக்குநர் நெல்சனின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்யின் பிறந்தநாளன்று படத்தின் பெயர் பீஸ்ட் வெளியாகி சாதனை படைத்தது. கையில் துப்பாக்கியை வைத்து வெளியான டைட்டில் இந்திய அளவில் ரசிகர்கள் டிரெண்ட்டாக்கினார்கள். படப்பிடிப்பிற்கு ஜூலை 1 முதல் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் பீட்ஸ் ஹூட்டிங் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் விமான நிலையத்தில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவீடியோ தற்போது எடுக்கப்பட்டதா? இல்லை ரசிகர்களால் பழைய வீடியோவாக வெளியானதா என்று தெரியவில்லை.
#vijay pic.twitter.com/me06rJbPOG
— Selva Vj (@SelvaVj54088453) June 29, 2021



















