தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் தற்போது செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் பிரபலமானவர்கள் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.
1. ப்ரியா பவானி ஷங்கர்
இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்து பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பெரியளவில் பிரபலமானார்.
மேலும் தற்போது தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாகவும் உள்ளார்.
2. சரண்யா துராடி
இவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக 4 வருடங்கள் பணிபுரிந்து விட்டு பின்னர் விஜய் டிவி சீரியலின் மூலம் பிரபலமானார்.
இவர் நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து, ரன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. அனிதா சம்பத்
அனிதா சம்பத் சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே செம பிரபலமாகினார். அதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
4. லாஸ்லியா
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழகத்தில் பெரியளவில் பிரபலமானார்.
தற்போது இவர் ஒரு சில படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.