நாட்டின் அனைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்கும் வகையிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலையிலான மருத்துவர்களினதும் கட்டாய வயதெல்லை 63 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாக, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சினால் நேற்றைய தினம் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவர்களின் ஓய்வு வயதெல்லையை 63 வயதாக நீடிப்பதற்கும் ஓய்வூதியம் தொடர்பான திருத்தங்களைச் செய்யவும் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கட்டாய வயதெல்லை 60 ஆக காணப்பட்டதுடன் கடந்த ஆண்டு அது 61 வயதாக நீடிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்பொழுது அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஓய்வு வயதெல்லை 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.