பாலிவுட் நடிகரான திலீப் குமார் 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அடுத்து, சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக 1998-ல் நடித்தார். இதையடுத்து, 98 வயது திலீப் குமாருக்குச் சமீபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரு வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், தற்போது மூச்சுத் திணறல் மீண்டும் ஏற்பட்டதால் இந்த மாதம் 2-வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மும்பை ஹிந்துஜா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்….