டெவன் பகுதியில் இருந்து தலையில்லாமல் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம், இரண்டு வாரங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து மாயமானவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Wembley பகுதியில் வசித்து வந்த 67 வயதான Mee Kuen Chong என்பவர் ஜூன் 11ம் திகதி முதல் மாயமாகியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே டெவன் கடற்கரை ரிசார்ட் பகுதியில் இருந்து தலையில்லாமல் பெண்னின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குடியிருப்பில் இருந்து சுமார் 220 மைல்கள் தொலைவில் இருந்தே அவரது உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
அவரது மரணம் தொடர்பில் பொலிசார் தற்போது பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலும், ஜூன் 10ம் திகதி முதல் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட ஜூன் 27ம் திகதி வரையான மொத்த நிகழ்வுகளை பட்டியலிட முயற்சி மேற்கொள்ளப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனால், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் விளக்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளன்ர்