இலங்கையின் வான்வெளியை மூன்றாம் நாட்டுடனான கூட்டு இராணுவப் பயிற்சிக்கு பயன்படுத்துவதற்கான இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக வெளியான ஊடக அறிக்கைகளை இந்திய உயர்ஸ்தானிகரகம் மறுத்துள்ளது.
இந்த தகவல் உண்மையில் தவறானவை என்று உயர்ஸ்தானிகரகம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
மூன்றாம் நாட்டுடன் எந்தவொரு கூட்டுப் பயிற்சியின் நோக்கத்திற்காக அண்மைக் காலங்களில் இலங்கை வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா கோரிக்கை விடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















