துறைமுக சேவை மற்றும் சுங்கச் சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதன் ஊடாக கொள்கலன்களைக் கொண்டுசெல்லும் போது சம்பந்தப்பட்ட தரப்பினர் எதிர்கொள்ளும் சவால்கள் பலவற்றுக்குத் தீர்வு கிடைக்கப்பெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரின் தலைமையில், கொள்கலன்களைக் கொண்டு செல்லும் போது சம்பந்தப்பட்ட தரப்பினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது பேசிய நாமல் ராஜபக்ச, பொருட்களுக்கான அனுமதி வழங்கல் நடவடிக்கையின் போது, களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பொருட்களைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதத்தின் விளைவாக ஒட்டுமொத்த செயற்பாட்டிலும் தாமதம் ஏற்படுகின்றது.
அதற்குத் தீர்வு காண்பதற்கு பார்க்கோர்ட் அடிப்படையிலான வரிசைப்படுத்தல் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.



















