பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதில் இவரது க்யூட்டான நடிப்பு, ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
இதையடுத்து, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் சர்ச்சையில் சிக்கி வெளியேறிய நிலையில், சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக மாறினார். கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.
அந்த வகையில், தற்போது வெளியிட்ட ஒரு புகைப்படம் பார்வையாளர்களை வியப்படைய செய்துள்ளது.
அந்த புகைப்படத்தில், கர்ப்பமாக இருக்கும் தோற்றத்தை போல் தெரிவதால், ஷிவானியை என்ன கர்ப்பமாகிட்டீங்களா? என கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
View this post on Instagram