சுவாசம் மூலமாக கொரோனாவை கண்டறியும் நவீன முகக்கவசத்தை, ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். கோவிட் டெஸ்ட் எடுக்க கூட பயந்து கொண்டு வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
மேலும், ஏராளமானோர் நீண்ட நேரமாக மருத்துவமனையிலேயே காத்திருந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு செல்கின்றனர்.
இதனை போக்கும் வகையில், விஞ்ஞானிகள் சிலர், 90 நிமிடங்களிலேயே கொரோனாவை கண்டறியும் நவீன மாஸ்க் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை முகக்கவசத்தை 15 முதல் 30 நிமிடங்களுக்கு மேலாக அணிய வேண்டும்.
அதன் பின்னர் முகக்கவசத்தில் உள்ள பட்டனை அழுத்தினால், 90 நிமிடங்களில் சுவாசத்தின் மூலமாக கொரோனாவை கண்டறிந்துவிடுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசத்தில் புகுத்தப்பட்டுள்ள சென்சார் மூலமாக இந்த மாஸ்க், எளிதில் கொரோனாவை கண்டறிந்துவிடுவதாகக் கூறுகின்றனர். இந்த வகை முகக்கவசம், குறைந்த செலவில் கொரோனாவை வேகமாகக் கண்டறியும் எனவும் கூறியுள்ளனர்.