இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாண்டனில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கேப்டன் மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். பூனம் ரௌத், பூஜா வஸ்தரகர் மற்றும் எக்தா பீஷ்த் ஆகியோருக்குப் பதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்நே ராணா, பூனம் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்.
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஏற்கெனவே தோல்வியடைந்ததால், இந்த ஆட்டத்தில் வென்று தொடரைத் தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.




















