ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சபா கரீம் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற வேண்டிய டி20 உலகக்கோப்பை தொடர், கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சபா கரீம், என்னை பொறுத்தவரை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் மேற்கிந்திய தீவு அணி தான் முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாவதாக இந்திய அணிக்கு வாய்ப்புள்ளது. மேற்கிந்திய தீவு அணியில் அதிகமான அதிரடி வீரர்கள் உள்ளனர்.
ஒரு சில சிக்ஸ்கள் டி.20 போட்டிகளை அப்படியே மாற்றிவிடும்.இந்திய அணியை பொறுத்தவரையில் அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் கலந்து அனைத்து வகையில் போதிய பலத்துடன் உள்ள அணியாக திகழ்கின்றனர்.
அதே வேளையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை அசால்டாக எடை போட்டுவிட கூடாது, இரண்டு அணிகளிலும் உலகின் தலைசிறந்த வீரர்கள் பலர் உள்ளனர்.
மற்ற அனைத்து அணிகளையும் விட நியூசிலாந்து அணியில் மிக சிறந்த ஆல் ரவுண்டர்கள் அதிகம் உள்ளனர். டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் விளையாடிய விதத்தை யாரும் மறந்துவிட முடியாது, என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்ந்த பார்ப்போம் என கூறியுள்ளார்.