நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயவர்வடைந்துள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் 02-07-2021 கோவிட் பெருந்தொற்று காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட 34 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 30 முதல் 59 வயது வரையிலான 6 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்ட 28 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதில் 21 பேர் பெண்கள் எனவும், 13 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நாட்டில் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 3191ஆக உயர்வடைந்துள்ளது.



















