விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கதிர் வேடத்தில் நடித்து வருபவர் சின்னத்திரை நடிகர் குமரன்.
இந்நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன் தற்போது தனது 6 வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ரொமான்ஸ் போஸ் கொடுத்து குமரனும் அவரது மனைவி சுஹாசினியும் கருப்பு வெள்ளை மற்றும் கலரில் பதிவு செய்துள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏராளமானோர், தங்களது வாழ்த்துகை கமெண்ட்ஸ் மூலம் அளித்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram




















