கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது.
இது சரும நோய்களுக்கும், முடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. இந்த கற்றாழையில் இருந்து சாறு மற்றும் ஜெல் பெறப்படுகிறது.
இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது முகத்தில் வரும் அத்தனை சரும பிரச்சினைகளை தீர்க்க கூடிய வகையில் பெரிதும் பயன் அளிக்கின்றது.
அந்தவகையில் சரும பிரச்சினைகளை போக்க இதனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
- கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊறவைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
- முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் தான் வயதான தோற்றத்தை கொடுக்கும். இந்த வயதான தோற்றத்தை தடுப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.
- சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
- வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண் ஆறும்.
- கற்றாழை முகத்தை பொலிவை தருவதோடு இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது. கற்றாழையை தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் மிருதுவாக இருக்கும்.