முடி உதிர்தல் பிரச்சினை பொதுவாக எல்லாருக்கும் இருக்கும் ஒரு தலையாய பிரச்சினை.
இதனுடன் பொடுகு, தலை அரிப்பு போன்றவையும் தொற்றிக் கொள்ளும். சில பேருக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கை கூட அந்த இடத்தில் ஏற்பட்டு விடும்.
உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை நீங்கள் பயன்படுத்தினாலே போதும் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.
முடி உதிர்தல் பிரச்சினைக்கு பிறகும் உங்கள் கூந்தல் வளர்ச்சியை தூண்ட வெங்காயம் எப்படி உதவுகின்றது என்று பார்க்கலாம்.
வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள அதிகப்படியான சல்பர் நமக்கு முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
இது தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து நீண்ட அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலை பரிசளிக்கிறது.
பயன்படுத்தும் முறை
வெங்காயத்தை நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.