எப்போதும் புன்னகையுடன் இருந்தால், அதுவே ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டும்.
ஆனால் அப்படி புன்னகைக்கும் போது பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் இருந்தால், எப்படி இருக்கும்? இதற்கு என்ன தான் டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்கினாலும் பற்கள் வெள்ளையாகாது.
மாறாக, ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் அகன்றுவிடும்.
பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின் டூத் பிரஸ் கொண்டு இந்த கலவையை பற்களில் தடவி 1-2 நிமிடம் கழித்து, வாயை நீரால் கழுவ வேண்டும்.
இப்படி 10 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.
வாழைப்பழ தோல்
வாழைப்பழத்தின் தோலை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின் ஒவ்வொரு துண்டாக எடுத்து பற்களை மென்மையாக 2 நிமிடம் தேய்க்க வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
இந்த மாதிரி தினமும் காலையில் செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் அகலும்.