பிரான்சில் தாய்ப்பாலுட்ட மறுத்த பிரபல கேளிக்கை பூங்கா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
பிரான்சில் இருக்கும் பிரபல கேளிக்கை பூங்காவான Disneyland Paris-க்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை பெண் ஒருவர் தன்னுடைய இரண்டு மாத கைக்குழந்தையுடன் சென்றுள்ளார்.
அப்போது குழந்தை திடீரென்று அழுத படி இருந்ததால், அவருக்கு பசிப்பதாக நினைத்து தாய்ப்பால் ஊட்டியதாக கூறப்படுகிறது. இவர் தாய்ப்பால் கொடுப்பதைக் கண்ட, அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக, அப்பெண் இருக்கும் இடத்திற்கு வந்து, இங்கு பால் கொடுப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர்.
இது குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாக, சமூக ஆர்வலர்கள் போன்றோர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று Disneyland Paris இது போன்று நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நிலைமைக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம், மேலும் சம்பந்தப்பட்ட தாயிடம் எங்கள் உண்மையான மன்னிப்பை மீண்டும் முன்வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.