இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்திய ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு தொற்றியவர்களில் 5 வீதமானோர் ஆபத்தான நிலைக்குள்ளாக கூடும் எனவும் 2 வீதமானோர் உயிரிழக்க கூடும் எனவும் இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிலைமை அதிகரிக்க கூடும் என சங்கத்தின் தலைவர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
மக்கள் அவதானமின்றி செயற்பட்டால் இந்தியாவுக்கு நேர்ந்த நிலைமை இலங்கைக்கும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை என அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.