கிழக்கு சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடல் பிரச்சினை உள்ளிட்ட சமீபத்திய பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து ஜப்பானும் இலங்கையும் விவாதித்தன.
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நோபூ கிஷி, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் காணொளி தொலை தொடர்பில் நேற்று கலந்துரையாடல் நடத்தினார்.
கலந்துரையாடலின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அத்துடன் கடற்படை ஒத்துழைப்பு மற்றும் வான்வழி ஒத்துழைப்பு உள்ளிட்ட பரந்த அளவிலான பகுதிகளில் நிலையான முன்னேற்றம் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.
இதேவேளை இந்த சூழலில், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் நிலைமையை மாற்றுவதற்கான ஒருதலைப்பட்ச முயற்சிகளுக்கு அமைச்சர் கிஷி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.