பிரபல பாலிவுட் நடிகரான ஆமிர்கான், தன்னுடைய 2வது மனைவியான கிரண் ராவை விரைவில் விவாகரத்து செய்யவுள்ளார், இதுதொடர்பான அறிவிப்பை இருவரும் இணைந்தே வெளியிட்டனர்.
ஆமிர்கான் தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை 2002-ம் ஆண்டு விவாகரத்து செய்திருந்தார். இவர்களுக்கு ஜூனைத் என்கிற மகனும், ஈரா என்கிற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் தன்னுடைய படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவை கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சுமார் 16 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண பந்தம், விரைவில் முடிவுக்கு வரவுள்ளது, இதை இருவரும் ஒன்றாக சேர்ந்தே அறிவித்தனர்.
இந்நிலையில் அமீர்கானின் இந்த முடிவுக்கு நடிகை பாத்திமா சனா ஷேக்கே காரணம் என கூறப்படுகிறது.
தங்கல் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்த போது பழக்கம் ஏற்பட்டதாகவும், சினிமா பார்ட்டிகளில் ஒன்றாக சேர்த்து ஊர் சுற்றியதாகவும் தெரிகிறது.
மேலும் கிரண் ராவை விவாகரத்து செய்துவிட்டு, பாத்திமாவை அமீர்கான் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
தங்கல் படத்தில் ஆமிர் கானின் மகளாக நடிகை பாத்திமா சனா ஷேக் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.