விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். நிகழ்ச்சிக்கு பின் ஏகப்பட்ட கலைஞர்கள் பணிபுரிகிறார்கள்.
முதல் சீசனில் தொடங்கிய வெற்றி 4வது சீசன் வரை முடிந்துள்ளது. 5வது சீசன் எப்போதோ தொடங்க வேண்டும் ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக இன்னும் தொடங்கவில்லை.
வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து பிக்பாஸ் 5வது சீசன் தொடங்கும் என கூறப்படுகிறது, போட்டியாளர்கள் யார் யார் என்பது தெரியவில்லை, ஆனால் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
தற்போது நிகழ்ச்சி குறித்து புதிய தகவல் ஒன்று வந்துள்ளது. 5வது சீசன் மட்டும் இல்லை 6வது சீசனையும் கமல்ஹாசன் அவர்களே நடத்த இருப்பதாகவும் இப்போதே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.