தமிழ் சினிமாவில், பருத்திவீரன் படத்தில் நடித்து பெரியளவில் பேசப்பட்டும் அதற்கான தேசியவிருதினையும் பெற்றவர் நடிகை பிரியாமணி.
இதையடுத்து படங்கள் சரியாக அமையாமல் இருந்தது. தற்போது வெப் சீரிஸ் படங்களில் போல்ட்டான கதபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கொட்டேஷன் கேங்’ என்ற படத்தில் நடித்து வரும் பிரியாமணி, பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.
தற்போது தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வரும் பிரியாமணி, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். எனக்கு வயதாகிவிட்டது. கறுப்பாக இருக்கிறேன். குண்டாகி விட்டேன் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்வது மிகவும் மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கின்றது.
இப்படி யாரையும் தரக்குறைவாக பேசாதீங்க. கருப்பாக இருப்பதும் அழகு தான் என்று கூறி கஷ்டமாக கூறியுள்ளார்.