உலகின் மிகப்பெரிய மணல் சிற்பமாக மாளிகை ஒன்று டென்மார்க் நாட்டின் புளோக்குஸ் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 21 புள்ளி 16 மீட்டர் உயரமுடைய இந்த மணல் மாளிகை முந்தைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்து புதிய சாதனையாக இடம்பெற்றது. முன்னர் ஜெர்மனியின் மணல்மாளிகை 17 புள்ளி 66 மீட்டர் உயரம் இருந்தது. இந்த மணல் மாளிகையின் கொள்கைவிளக்கம் கொரோனா விழிப்புணர்வாக வடிவம் பெற்றுள்ளது.
சுமார் 4 புள்ளி 8 டன்கள் மணல் பயன்படுத்தப்பட்டது. விழுந்துவிடாமல் இருக்க முக்கோண வடிவில் அமைக்கப்பட்டு மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.30 மணல் சிற்பிகள் இதன் மீதான உருவங்களை செதுக்கியுள்ளனர்.