வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வெளிநாடுகளிலிருந்து இலங்கைவரும் நபர்கள், கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றிருந்தால் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதி செய்யப்படும் நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சிவில் விமான சேவைகள் அதிகார சபை இன்று தெரிவித்துள்ளது.
இதன்படி இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு 14 நாட்களின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்றல்லாதவர் என கண்டறியப்படுபவர்கள் தனிமைப்படுத்தல் இன்றி வெளியேற அனுமதிக்கப்படுவர்.
இதனுடாக, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகின்றவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது. எனினும், தொற்று உறுதிசெய்யப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
அதேவேளை, இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு இந்த நடைமுறை செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.