காதலுக்கு எல்லையே இல்லை என்பார்கள், அது ஒரு அழகான உணர்வு, மொழி, இனம், மதம் கடந்த தனித்துவமான கவிதை என்றெல்லாம் காதலை வர்ணித்துக்கொண்டே போகலாம்.
இந்த பதிவில் பிரான்ஸின் அழகு தேவதைக்கும், இந்தியாவின் ஆட்டோ டிரைவராக வலம் வந்த இளைஞனுக்கு காதல் மலர்ந்த சுவாரசிய சம்பவம் பற்றி பார்க்கலாம்.
இந்தியாவின் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ரஞ்சித் சிங் ராஜ், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ராஜ்-ஜை அவரது குடும்பத்தினர் பள்ளியில் சேர்த்துள்ளனர்.
ஆனால் 10ம் வகுப்பில் தோல்வியுற்று, படிப்பிலும் சுமாராகவே இருந்துள்ளார், தனக்கென ஒரு லட்சியமும் இல்லாமல் சுற்றித்திரிந்த ராஜ், 16 வயதில் ஆட்டோ ஓட்டத் தொடங்கியுள்ளார்.
சில ஆண்டுகள் ஆட்டோ டிரைவராக வாழ்க்கை நகர, மற்ற டிரைவர்கள் எல்லாம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க, பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற வேறு மொழிகளை பேசியதால் ராஜ்-க்கும் மற்ற மொழிகளை கற்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
2008ம் ஆண்டு காலகட்டத்தில் பலரும் ஐடி துறையில் பணிபுரிந்ததால், ஆங்கிலம் மட்டுமே கற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மெல்ல மெல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, தங்களுடைய அழகிய நகரை சுற்றிக்காண்பிக்கும் Tourist Guideஆக பணிபுரிய தொடங்கினார்.
அங்கு தான் தன்னுடைய வருங்கால மனைவியை சந்திப்பார் என்று ராஜ் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.
ராஜ் கூறுகையில், அவளுடைய தோழியுடன் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்தாள், நாங்கள் முதன்முதலில் City Palaceல் சந்தித்துக் கொண்டோம்.
நான் தான் அவர்களுக்கு ஜெய்ப்பூரை சுற்றிக்காண்பித்தேன், சுற்றுலா முடிந்ததும் அவள் வெளிநாடு சென்றுவிட்டாள், இருந்தாலும் Skypeல் நாங்கள் தொடர்பு கொண்டோம்.
அப்போது தான் இருவரும் காதலில் விழுந்து விட்டதை உணர்ந்தோம் என மனம் நெகிழ்கிறார்.
தொடர்ந்து, பிரான்ஸ் செல்வதற்காக பலமுறை விசாவுக்கு விண்ணப்பித்தேன், ஆனால் எனக்கு மறுக்கப்பட்டது, அவள் எனக்காக இந்தியா வந்த போது, பிரெஞ்சு தூதரகத்தில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
ஒருவழியாக எனக்கு தூதரக அதிகாரிகள் விசா வழங்கினர், நானும் பலமுறை சென்றேன்.
2014ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டோம், எங்களுக்கு அழகான குழந்தைகள் பிறந்தார்கள்.
அடுத்ததாக, நீண்ட கால பிரெஞ்சு விசாவுக்கு விண்ணப்பித்தேன், ஒருவழியாக பிரெஞ்சு மொழியை கற்றுக்கொண்டதால் எனக்கு விசாவும் கிடைத்தது.
தற்போது நாங்கள் மிக மகிழ்ச்சியாக ஜெனீவாவில் வசித்து வருகிறோம், அங்குள்ள ரெஸ்டாரண்டில் நான் வேலை பார்த்துக் கொண்டே யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறேன்.
சொந்தமாக உணவகம் தொடங்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு என்கிறார் ராஜ்!!!